காற்றுமாசு அதிகரிப்பால் குழந்தைகளின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலமும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் டென்மார்க் ஆய்வாளர்கள்.
23 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக காற்றுமாசு உள்ள சூழலில் வசிக்கும் குழந்தைகளுக்கு மனச்சிதைவு நோய் வரும் பாதிப்பு 60% அதிகரிப்பது தெரியவந்துள்ளது.