Type Here to Get Search Results !

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்.! ஆராய்ச்சியில் வெளியான முடிவு..




56 கிராம் எடையுள்ள கோழி முட்டை ஒன்றில் அதிகபட்சம் 80 கலோரிகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. எவ்வளவு நல்ல சத்தான உணவாக  இருந்தாலும், நாளொன்றுக்கு இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதே உண்மை. உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்க கூடிய கோழி முட்டையை சிலர் மிதமிஞ்சி ஒரு நாளைக்கு அதிகமான அளவு சாப்பிடுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான செயல்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் நாள் ஒன்றிற்கு 2 முட்டைக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். மிக நல்ல உடல்நல ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் வேண்டுமானால் 3 முட்டைகளை எடுத்து கொள்ளலாம்.
ஆனால் பொதுவாக நாளொன்றுக்கு 2 முட்டைகளுக்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல என குறிப்பிட்டுள்ளனர். ஒரு முட்டையில் 200 முதல் 250 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. அன்றாடம் 300 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உடலில் சேரும்போது, இதய நோய்க்கான வாய்ப்பு 17% ஆக உள்ளது. தவிர இறப்பிற்கான அபாயமும் 18% உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முட்டையின் வெள்ளை கருவில் இருந்து தான் புரதச்சத்து அதிம் உள்ளது. எனவே முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி விட்டு, வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டால், கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல நாளொன்றுக்கு 2 முட்டைகள் சப்பிட்டே ஆகா வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. வாரத்திற்கு 4 முதல் 5 முட்டைகளை உட்கொண்டாலே உடலுக்கு ஆரோக்கியமே என்கின்றனர் மருத்துவர்கள்.

Top Post Ad

Below Post Ad