Type Here to Get Search Results !

தமிழக பாஜக தலைவராக இவர் தான் தேர்வு?


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் அந்த இடம் காலியானது. இதையடுத்து அடுத்த தலைவர் யார் என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கான தேர்வில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

வரும் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வலுவான தலைவரை பாஜக தலைமை நியமிக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்று சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் து.குப்புராமுவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 எனவே அவரை தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இன்று மாலை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழக பாஜக தலைவராக குப்புராமு நியமிக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. து.குப்புராமு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 1986 முதல் 2006ஆம் ஆண்டு வரை பட்டினங்காத்தான் ஊராட்சி மன்ற தலைவராக மூன்று முறை பதவி வகித்தவர். 

பாஜக மாநில துணைத் தலைவராகவும், விஸ்வ இந்து பரிஷத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார். 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டவர்.

Top Post Ad

Below Post Ad