தெலங்கானா அருகே நெகிழ்ச்சி சம்பவம்
ஸ்ரீகாளஹஸ்தி: தெலங்கானா அருகே வாகனம் மோதி படுகாயமடைந்த தாய் குரங்கு தனது வலியையும் பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட சொட்ட குட்டிக்கு பால் கொடுத்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சிடைய செய்தது.
தெலங்கானா மாநிலம், நர்சாபூரிலிருந்து ஐதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் கும்முடிதல கிராமம் அருகே காடுகள் நிறைந்த பகுதி உள்ளது. இதனால் காட்டு பகுதியிலிருந்து வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்கு வருவது வழக்கம்.அதேபோல் உணவை தேடி குரங்கு ஒன்று சாலையை கடந்தது. அப்போது நரசாப்பூர் நோக்கி சென்ற வாகனம் ஒன்றில் குரங்கு சிக்கி பலத்த காயமடைந்தது. ஆனாலும் பசியைப் போக்க ரத்த காயங்களையும் பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட சொட்ட தனது குட்டி குரங்குக்கு பால் கொடுத்தது. இந்த காட்சி அவ்வழியே வாகனங்களில் செல்பவர்களை நெகிழ செய்ததுடன் கண் கலங்க செய்தது. இதனால் தாய்மை என்பது விலங்குகளுக்கும் அப்பாற்பட்டதல்ல என்பதை உணர்த்தும் உணர்ச்சிபூர்வமான காட்சியாக இருந்தது என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.