பொது இடத்தில் குப்பை கொட்டினால் ரூ.500 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு ரூ.500 முதல் 5000 வரையும், பொது இடத்தில் கட்டுமானக் கழிவுகள் கொட்டினால் ரூ.2000 முதல் 5000வரையும், குப்பைகளை எரிப்பவர்களுக்கு ரூ.500 முதல் 2000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை சேகரிக்க கட்டணம்
சென்னையில் வீடுகள்தோறும் மாநகராட்சி சார்பில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், இனி அந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு ரூ.10 முதல் 100 வரையும், வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000 முதல் 5000 வரையும், நட்சத்திர விடுதிகளுக்கு ரூ.300 முதல் 3000 வரையும், திரையரங்குகளுக்கு ரூ.750 முதல் 2000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.