உலகில் பெரிய மலர் ஒன்று இந்தோனேசியாவின் காடுகளில் பூத்துள்ளது.
இந்தோனேசியா மழைக்காடுகளில் மிக அரிய வகை மலர்கள் மலர்ந்து வருகின்றன. ஆகவே, வனப்புமிகு அந்தப் பகுதி வாசனை மலர்களால் நிரம்பி வழிகிறது. அப்படி இந்த மழைக்காட்டில் மலர்ந்த மலர் ஒன்று உலகில் மிகப்பெரிய மலர் என்று தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய தாமரை வடிவத்தில் மலர்ந்திருக்கும் இந்த மலர் கிட்டத்தட்ட 4 அடி அகலம் கொண்டது. மூன்று அடி உயரம் உடையது. சிகப்பு நிறத்தில் மிகப் பிரசாகமாக காட்சி அளிக்கிறது.
அதனை வன ஆய்வாளர்கள் கண்டறிந்து ஆய்வு செய்து வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தப் பூ மலர்ந்த ஒருவாரம் வரை வாடாமல் உள்ளது. அதன்பிறகு காய்ந்து மடிந்துவிடும் தன்மை கொண்டுள்ளது.
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் உள்ள மராம்புவாங் நாகரய் பாரினி கிராமத்தில் உள்ள இயற்கை காப்பகத்தின் காட்டில் மலர்ந்துள்ள இப்பூவை அளவிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ராஃப்லீசியா துவான்-முடே என்று அழைக்கப்படும் இந்தப் பிரமாண்டமான மலர், 46 அங்குலம் அகலம் கொண்டது.
இதுவரை வளர்ந்த பூ இனங்களில் இதுதான் மிகப்பெரியது. தாவரங்கள் கொடிகளில் ஒட்டுண்ணியாக வாழும் இவை, சில நாட்கள் மட்டுமே மலரும் தன்மை உடையன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.