இந்நிலையில் துணை தலைவர்களின் ‘செக்’ பவரை, தமிழக அரசு பறிக்க உள்ளதாக தகவல் பரவி வருவதால், பல லட்சம் செலவு செய்துள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஊராட்சி துணைத்தலைவர் கனவில் வெற்றிபெற்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூறுகையில், ‘ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க பேரூராட்சி துணை தலைவர்களுக்கு ‘செக்’ பவர் ரத்து செய்யப்பட்டுள்ளது போன்று, ஊராட்சி துணை தலைவர்களின் ‘செக்’ பவரை ரத்து செய்ய ஏற்கனவே பல்வேறு சங்கத்தினர், தமிழக அரசுக்கு தேர்தலுக்கு முன்பே கோரிக்கை விடுத்திருந்தனர்.
தற்போது பெரும்பாலான ஊராட்சிகளின் துணை தலைவர் பதவி, எதிர்க்கட்சியினர் வசம் செல்ல வாய்ப்புள்ளதால் தமிழக அரசு விரைவில் ஊராட்சி துணை தலைவர்களின் ‘செக்’ பவரை பறிக்கும் அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது’ என்றனர். இதனால் பல லட்சம் செலவு செய்து உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் உள்ள துணைத் தலைவர் பதவிக்கு முயற்சிக்கும் வார்டு உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இன்னும் சிலர் துணை தலைவர் பதவியை கைவிட்டுவிடலாமா என்றும் யோசித்து வருகின்றனர்.