Type Here to Get Search Results !

சென்னை ரயில் நிலையத்தில் செல்ஃபோன் பறிப்பு? வைரலாகும் வீடியோ


சென்னையில் புறநகர் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் செல்ஃபோனைப் பறித்துச் செல்வது போன்ற வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
சென்னை புறநகர் ரயில் நிலையங்கள் மற்றும் வழித்தடங்களில் ஆங்காங்கே திருட்டு, பறிப்பு சம்பவங்கள் நடப்பதாக அவ்வப்போது புகார்கள் எழுகின்றன.

குறிப்பாகப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற திருட்டுகளின்போது செல்ஃபோன், நகை மற்றும் பணம் உள்ளிட்டவை பறிக்கப்படுகின்றன.
பாதுகாப்பை ரயில்வே காவல்துறையினர் அதிகரித்திருந்தாலும், இதுபோன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துவருவதாகவே பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.


இந்த நிலையில், சென்னை புறநகர் ரயில் நிலையம் ஒன்றில், ரயிலின் படியின்  அருகே நின்று பேசிக்கொண்டிருந்த ஒருவரின் செல்ஃபோனை முகமூடி அணிந்த ஒருவர் பறித்துக் கொண்டு ஓடுவது போன்ற வீீடியோ காட்சி இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
அமைதியாகக் காணப்படும் அந்த ரயில் நிலையத்தில், ரயில் புறப்பட்டதும், ரயில் பெட்டி வாயிலின் அருகே நின்று பேசிக்கொண்டிருப்பவரின் செல்ஃபோனைப் பறித்துச் செல்லும் முகமூடி அணிந்த நபர், சுற்றுச்சுவரைத் தாண்டிக் குதித்துத் தப்பிச் செல்கிறார். இதனை அங்கிருந்த சிலர் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.
இந்தப் பறிப்பை ஒருவர் தனது செல்ஃபோனில் படம் பிடிப்பது போன்று அமைந்துள்ள இந்த வீீடியோ பதிவு, உண்மையில் பறிப்புப் பதிவா? அல்லது திட்டமிட்டு எடுக்கப்பட்ட விடியோவா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ள நிலையில், இதுதொடர்பான நம்பகத் தன்மை கேள்விக்குறியாகவே இருக்கிறது. எப்படியோ வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.
முன்னதாக, ரயில்வே பயணிகளுக்கு ஏதாவது காவல் உதவி தேவையெனில், '1512' என்ற எண்ணுக்கு தொடா்பு கொண்டு பாதுகாப்பு தொடா்பாக புகாா்களைத் தெரிவிக்கலாம். மேலும், 9962500500 என்ற கட்செவி எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று ரயில்வே காவல் துறை இயக்குநா் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவ, மாணவிகள் ரயில் பயணத்தின்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ரயிலில் பெட்டி வாயிலில் நின்றோ, கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டோ பயணம் மேற்கொள்வதைத் தவிா்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Top Post Ad

Below Post Ad