இரண்டு நாட்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றும், இன்றும் 2 நாள்கள் எண்ணப்பட்டன. *மாவட்ட கவுன்சிலர்* பதவிகளுக்கு 513 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 512க்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி *அதிமுக கூட்டணி 240 இடங்களில் வெற்றி* பெற்றுள்ளது. அதில் அதிமுக மட்டும் 213 இடங்களை கைப்பற்றியுள்ளது.
*திமுக கூட்டணி 270 இடங்களில் வெற்றி* பெற்றுள்ளது. அதில் திமுக மட்டும் 247 இடங்களை கைப்பற்றியுள்ளது.
*5,067 ஒன்றிய கவுன்சிலர்* பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், *அதிமுக கூட்டணி 2,136 இடங்களில் வெற்றி* பெற்றுள்ளது. அதில் அதிமுக மட்டும் 1,797 இடங்களை கைப்பற்றியுள்ளது.
*திமுக கூட்டணி 2,356 இடங்களை கைப்பற்றியுள்ளது*. அதில் திமுக மட்டும் 2,110 இடங்களில் வென்றுள்ளது.
ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி, 95 இடங்களை கைப்பற்றியுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி ஓரிடத்தில் வென்றுள்ளது.