இந்த கல்வியாண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது இந்த நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வேண்டும் என பாமக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென இந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் கூறியபோது '5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளதால் பாமக போராட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார். ஜிகே மணியிடம் அளித்த உறுதிமொழியின்படி பொதுத்தேர்வு ரத்து என அறிவிப்பு தமிழக அரசிடம் இடமிருந்து வருமா?