Type Here to Get Search Results !

3,000 ஆண்டுகள் பழைமையான மம்மியின் குரல் கண்டுபிடிப்பு! அசத்திய ஆராய்ச்சியாளர்கள்!


எகிப்தில் உள்ள மம்மிகளின் மீது பல சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது அதுகுறித்த தகவல்கள் வெளியாகி நம்மை ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் இப்போது ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல் மிகவும் விநோதமாக உள்ளது. 3,000 ஆண்டுகள் பழைமான மம்மி ஒன்றின் மீது நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அதன் குரல் எப்படி இருக்கும் என்பதை உருவாக்கியுள்ளனர்.
எகிப்தில் உள்ள தீப்ஸ் என்ற பழமையான இடத்தில் இருந்து நெஸியாமன் என்பவரிம் மம்மியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் அதன் குரல் எப்படி இருக்கும் என்ற ஆய்வை மேற்கொண்டனர்.
அதன்படி மம்மியை ஸ்கேன் செய்து, 3 டி பிரிண்டிங் உதவியுடன் குரல்வளையை உருவாக்கினார்கள். சில எழுத்துகளை மட்டும் உச்சரிக்கும் வகையில் ஆய்வு மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளனர். இதனையடுத்து வார்த்தைகளாக 3,000 ஆண்டுகளுக்கு முன்பு நெஸியாமன் எப்படி பேசியிருப்பார் என்பதையும் கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Top Post Ad

Below Post Ad