சவரன் ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 31,000 ரூபாயைத் தாண்டி உள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்ற ஆண்டின் இறுதியில் தங்கம் விலை உயர்வு இருந்த நிலையில் புத்தாண்டு தொடங்கியதிலிருந்தும் ஒவ்வொரு நாளும் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று 30,000 ரூபாயைத் தாண்டிய நிலையில் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை!சென்னையில் இன்று (ஜனவரி 6) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 64 ரூபாய் உயர்ந்து .3,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,832 ஆக மட்டுமே இருந்தது. இன்று கிராமிற்கு ரூ.64 உயர்ந்துள்ளது. நேற்று, 30,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 31,168 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 512 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. 3 நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து புதிய உச்சத்தில் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை!தங்கத்தின் விலையை போல் வெள்ளியின் விளையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.52,300 ஆக இருக்கிறது.