Type Here to Get Search Results !

உலகின் 2வது மிகப்பெரிய வைரத்தை வாங்கும் புகழ்பெற்ற நிறுவனம்

உலகின் 2வது மிகப்பெரிய வைரத்தை புகழ்பெற்ற லூயிஸ் உய்ட்டன் ((Louis Vuitton)) நிறுவனம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில்((Botswana)) உள்ள கரோவ் ((Karowe)) சுரங்கத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1,758 கேரட் செவெலோ வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. டென்னிஸ் பந்து வடிவ இந்த வைரத்தின் விலை இந்திய மதிப்பில் 355 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.



இந்த நிலையில் ஆடம்பர கைப்பைகளுக்கு பெயர்போன பிரெஞ்சு பேஷன் பிராண்ட் நிறுவனமான லூயிஸ் உய்ட்டன் இந்த வைரத்தை வாங்கவுள்ளதாக அதன் தலைமை நிர்வாகி மைக்கேல் பர்க் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தங்களின் போட்டி நிறுவனத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Top Post Ad

Below Post Ad