தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழன் காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே 21 வயது கல்லூரி மாணவி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டிநாயக்கன் தொட்டி கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிபிஏ இறுதி ஆண்டு மாணவி ஜெ.சந்தியா ராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் மிக இளம் வயதில் பஞ்சாயத்து தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.