Type Here to Get Search Results !

பி.சி.சி.ஐ-யின் 2020-ம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் டோனி இடம்பெறவில்லை

.சி.சி.ஐ-யின் 2020-ம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் டோனி இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. 

 






வெளியிட்டுள்ள வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவர் இனி எப்போதுமே இந்திய அணிக்காக விளையாட மாட்டார் என்று பொருளில்லை என்றும், ஆனால் பிசிசிஐயின் நீண்டகால திட்டத்தில் தோனி இல்லை என்றும் தெரிவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய அணிக்கு தலைமையேற்று செயல்பட்ட வீரர்களிலேயே ஒருநாள், சாம்பியன்ஸ் ட்ராபி, டி20 ஆகிய மூன்று வித சர்வதேச போட்டிகளிலும் உலக கோப்பையை பெற்று தந்த ஒரே கேப்டன் தோனி ஆவார்.

தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை, 2011இல் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை இந்திய அணி கைப்பற்றியிருந்தது.

வீரர்களின் ஊதியம் என்ன?
கிரேட் ஏ+ இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு முறையே ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் மொத்தம் 27 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு வீரர்கள் முறையே ஏ மற்றும் சி பிரிவுகளில் இடம்பெற்றுள்ளனர்.


ஏழு கோடி ரூபாய் (ஏ+ பிரிவு) ஊதியம் பெறும் வீரர்கள்:

விராட் கோலி
ரோகித் சர்மா
ஜஸ்பிரித் பும்ரா

ஐந்து கோடி ரூபாய் (ஏ பிரிவு) ஊதியம் பெறும் வீரர்கள்:

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
புவனேஷ்வர் குமார்
புஜாரா
ரஹானே
கே.எல். ராகுல்
ஷிகர் தவான்
முகம்மது ஷமி
இஷாந்த் சர்மா
குல்தீப் யாதவ்
ரிஷப் பந்த்

மூன்று கோடி ரூபாய் (பி பிரிவு) ஊதியம் பெறும் வீரர்கள்:

விருத்திமான் சாஹா
உமேஷ் யாதவ்
யஸ்வேந்திர சாஹால்
ஹர்திக் பாண்டியா
மயங்க் அகர்வால்
ஒரு கோடி ரூபாய் (சி பிரிவு) ஊதியம் பெறும் வீரர்கள்:


கேதர் ஜாதவ்
நவ்தீப் சைனி
தீபக் சாஹர்
மனிஷ் பாண்டே
ஹனுமா விஹாரி
ஷர்துல் தாக்கூர்
ஷ்ரேயாஸ் ஐயர்
வாஷிங்டன் சுந்தர்
மேற்காணும் பட்டியலில் எந்தவொரு பிரிவிலும் மகேந்திர சிங் தோனி இடம்பெறவில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி போட்டியில் கடைசியாக தோனி விளையாடினார்.

அதன் பின்னர் எந்தவொரு சர்வதேச போட்டியிலும் இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் பிசிசிஐயின் இந்த அறிவிப்பு மூலம் சர்வதேச அரங்கில் தோனியின் கிரிக்கெட் வாழ்வு முற்றுப்பெறும் தருணத்துக்கு வந்துவிட்டதா என சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.


Tags

Top Post Ad

Below Post Ad