பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டி20 ஆசிய கோப்பையில் விளையாட இந்திய அணி மறுத்தால் நாங்களும் இந்தியாவில் நடைபெறும் 2021 டி20 உலகக் கோப்பையில் பங்குபெற மாட்டோம்.
இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு,
இந்திய அணி பங்கேற்க மறுப்பதால், செப்டம்பரில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 போட்டியை நடத்த பாகிஸ்தான் அணி மறுத்துள்ளது. எனவே அப்போட்டி வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது எனச் செய்திகள் வெளியாகின. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி வாசிம் கான் மறுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முடிவு இது. எனவே நாங்களோ ஐசிசியோ ஆசிய கோப்பை டி20 போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதை மாற்ற முடியாது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 போட்டியில் விளையாட இந்திய அணி மறுத்தால் நாங்களும் இந்தியாவில் நடைபெறும் 2021 டி20 உலகக் கோப்பையில் பங்குபெற மாட்டோம் என்று கூறியுள்ளார்.