திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20-ம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுவரை சலுகை விலையில் ரூ.70-க்கு 4 லட்டுகள் வழங்கப்பட்டு வந்த திட்டம் ரத்த செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் ஒரு லட்டு ரூ.50 என்ற விலையில் எவ்வளவு வேண்டுமானாலும் பக்தர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தற்போது இலவச தரிசனத்திலும், மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்று வரும் பக்தர்களுக்கு மட்டும் இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இப்போதுள்ள நடைமுறையின் படி ரூ.300 கட்டணத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக இரண்டு லட்டுகள் வழங்ப்படுகிறது. மேலும்., மலைப்பாதையின் வழியாக நடந்து வந்து திவ்ய தரிசனம் செய்யும் பக்தகோடிகளுக்கு இலவசமாக ஒரு லட்டும்., சலுகை விலையில் ரூ.20 க்கு இரண்டு லட்டுகளும்., கூடுதல் லட்டுகள் தேவைப்பட்டால் ரூ.50 க்கு இரண்டு லட்டுகளும்., ரூ.70 க்கு 5 இலட்டுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப்போன்று இலவச தரிசனத்தில் வரும் பக்தகோடிகளுக்கு ரூ.70 க்கு 4 இலட்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தினமும் சுமார் 20 ஆயிரம் இலவச லட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.இதில் ஒரு லட்டின் எடையானது 160 கிராம் முதல் 180 கிராம் வரை இருக்கும் என்றும்., ஒரு லட்டு தயார் செய்வதற்கு ரூ.40 செலவு ஆகிறது. தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சலுகை விலை இலவச லட்டுகளின் காரணமாக திருப்பதி - திருமலை தேவஸ்தானத்திற்கு வருடத்திற்கு ரூ.241 கோடியே 20 இலட்சம் இழப்பீடு ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தினை ஈடுசெய்ய சவுலை விலை லட்டுகள் வழங்கும் நடைமுறை இரத்து செய்யப்பட்டு, தினசரி பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாகவும், அதற்கு மேல் தேவை என்றால் லட்டுக்கு ரூ.50 க்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது.
வரும் 20-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு இலவசமாக 1 லட்டு: தேவஸ்தானம் அறிவிப்பு