Type Here to Get Search Results !

ஜனவரி 14ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது விண்டோஸ் 7




கணினிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வின்டோஸ் 7-இன் பயன்பாட்டை ஜனவரி 14ம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வருகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
அடுத்தகட்ட நகர்வினை முன்னெடுக்கும் வகையில், உலக அளவில் கணினிகள் மற்றும் லேப்டாப்களில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள வின்டோஸ் 7 எனப்படும் ஆபரேடிங் சிஸ்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.


எதிர்காலத்தில் விண்டோஸ் 10 பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, விண்டோஸ் 7 பயன்பாட்டை 2020ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வருகிறது.
எனவே, இந்த தேதிக்குள் வின்டோஸ் 7ஐ பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது கணினி அல்லது டேப்டாப்பில் வின்டோஸ் 10ஐப் பதிவேற்றிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.


Top Post Ad

Below Post Ad