Type Here to Get Search Results !

தமிழகத்தில் தனியார் ரெயில்களை இயக்க 10 வழித்தடங்கள் தேர்வு - ரெயில்வே துறை அறிக்கை

நாடு முழுவதும் 150 ரெயில்களை தனியாருக்கு விட நிதி ஆயோக் முடிவு செய்துள்ளது. இதற்காக 103 வழித்தடங்கள் கண்டறிந்து நிதி ஆயோக், ரெயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் ரெயில்களை இயக்க 10 வழித்தடங்களை தேர்வு செய்யப்பட்டுள்ளது.


தாம்பரம்-மதுரை, தாம்பரம்-திருச்சி, தாம்பரம்- நெல்லை, சென்னை-பகத் கி கோதி (ஜோத்பூர்), சென்னை- சர்லபள்ளி (ஐதராபாத்), தாம்பரம் – பெங்களூர், சென்னை-கோவை, தாம்பரம்-கன்னியாகுமரி, சென்னை-ஓக்லா (கிழக்கு டெல்லி), சென்னை- ஹவுரா ஆகிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு தனியாருக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே துறை தரப்பில் கூறும்போது, "பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை அளிக்கவும், புதிய தொழில் நுட்பங்களை புகுத்தவும் ரெயில்களை தனியாருக்கு விட நடவடிக்கை எடுக்கப்படுகிறது

ரெயில்களை இயக்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு கம்பெனிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

நாடு முழுவதும் 103 வழித்தடங்களில் தனியார்கள் இயக்கும் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஏற்கனவே இயக்கப்படும் ரெயில்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். தற்போது உத்தேச வழித்தடங்களை கண்டறிந்து வருகிறோம். இந்த நடவடிக்கைக்கு கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை என்றனர்.






Top Post Ad

Below Post Ad