Type Here to Get Search Results !

பிராய்லர் கோழி சாப்பிடலாமா?

அரை வேக்காட்டு உணவுகள் பலவீனமான உடலை மேலும் பலவீனமாக்கும் என்னும் போது, விஸ்வரூப வளர்ச்சியாய் வேகமாக வளரும் பிராய்லர் கோழிகளை தொடர்ந்து சாப்பிடும் போது உடலுக்கு நன்மை தருமா?



உலகம் முழுக்க அசைவ பிரியர்கள் அதிகமாகிக்கொண்டு வருகிறார்கள். சுத்தமான அசைவம் என்று தங் களை அறிமுகப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள். அதே போன்று ஆரோக்கியமாக திடகாத்திரமா கத் தான் இருக்கிறோம் என்றும் அவர்களால் சொல்ல இயலுமா?

மூலிகை தாவரத்தையும், மருந்து இலைகளையும் தின்று வளர்ந்த ஆடுகள் இன்று சத்தில்லாமல் சக்கையை உண்டு கொழுத்திருக்கின்றன. இதற்கு சற்றும் சளைக்காமல் தானியங்களைத் தின்று மட்டுமே வளர்ந்த கோழிகள் சில குப்பை மேட்டில் மேய்ந்திருந்தாலும் சில கோழிகள் வீட்டுப்பராமரிப்பில் திடகாத்திரமாக இருக்கின்றன எனினும் இவற்றை தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டியதாயிருக்கிறது.
இதில் பிராய்லர் கோழி எனப்படும் கோழி இறைச்சிக்கு அசைவப் பிரியர்கள் அனைவருமே அடிமையாகிக் கிடக்கிறார்கள். சமீப காலங்களாக மருத்துவர்கள் கோழி இறைச்சியைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள்.

ஒருபுறம் அசைவம் உடலுக்கு சேரவேண்டும். குறிப்பிட்ட சத்துகள் அசைவத்திலிருந்து கிடைக்கிறது என்று சொல்லும் அதே நேரத்தில் பிராய்லர் கோழியைத் தவிர்க்க வலியுறுத்துவதற்கும் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.


chicken 65

சுவையைக் கூட்டும் விதமாய் தயாரிப்பு
அசைவப் பிரியர்களில் அதிகமானோர் கோழி இறைச்சியை விரும்ப காரணம் இதன் சுவைதான். எலும்புகள் இல்லாமல் மிருதுவான இந்த இறைச்சியை குழந்தைகளும் விரும்ப காரணமே இதுதான்.

சிக்கன் 65, சில்லிசிக்கன், பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன், பெப்பர் சிக்கன், மஞ்சூரியன், நாட்டிசிக்கன், சிக்கன் ரோல், சிக்கன் க்ரேவி, கபாப் சிக்கன், சிக்கன் வறுவல், சிக்கன் பராத்தா, க்ரிஸ்பி சிக்கன், ஸ்பிரிங் சிக்கன், கார்லி சிக்கன், சிக்கன் லாலிபாப், சிக்கன் டிக்கா இன்னும் இன்னும் விதவிதமான வகைகளில் ருசிக்க ருசிக்க திகட்ட திகட்ட வித்தியாசமான சுவைகளில் உமிழ்நீர் சுரக்க சுரக்க சப்புக்கொட்டி சாப்பிடுபவர்கள் மீண்டும் மீண்டும் இதை நாடுவதற்கு காரணமும் இதுதான்.

எண்ணெயில் பொறித்து கலர் கலராய் வண்ணம் சேர்த்து, காரமிக்க அதீத மசாலாக்கள் சேர்த்த இவை உட லுக்கு நல்லதைத் தரும் என்று எப்படி சொல்ல முடியும். அதற்கான காரணங்களைக் கண்டறிவோமா?

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழிகள் இயற்கை உணவுகளும் தானியங்களும் கொண்டு வளர்க்கப்படுகிறது. இதில் புரதசத்து நிறைந்திருக்கிறது. நம் உடலுக்கு வேண்டிய நோய் எதிர்ப்புசக்தியையும் தருகிறது. நாட்டுக்கோழி அடித்து சாப்பிட்டால் உடம்புக்கு உரம் இட்டது போல் திம்மென்று இருக்கும் என்று சொல்லும் முன்னோர்களின் வாக்கு இன்று வரை பொய்க்கவில்லை என்று சொல்லலாம்.


broiler chicken

பிராய்லர் கோழி
எல்லா கோழியும் நன்மைக்கல்ல. நாட்டுக் கோழி தரும் நன்மையை பிராய்லர் கோழியிடம் எதிர்பார்க்க முடி யாது என்பதே உண்மை. அசைவ உணவில் ஆண்டுக்கு 40 இலட்சம் டன் சிக்கன் உணவுகள் சாப்பிடுவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதனுடைய அளவு குறைவு என்றாலும் இந்த வகையான பிராய்லர் கோழிகள் பல்வேறுவிதமான நோய்களை உண்டாக்குகிறது என்று எச்சரிக்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

பிராய்லர் கோழியின் அசுர வளர்ச்சி
பிராய்லர் கோழிகள் வளர்க்கும் போது கோழி விரைவில் வளர்ச்சியடைய வேண்டும் என்று ஸ்டிராய் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த ஸ்டிராய்டு உடலுக்கு கேடு விளைவிப்பவை என்று எச்சரிக் கிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவாக கோழிகள் இறைச்சி பக்குவத்தை அடைவதற்கு 3 லிருந்து 5 மாதங்கள் வரை ஆகும். ஆனால் ஸ்டிராய்டு பயன்பாடு கோழியை அசுர வளர்ச்சிக்கு உட்படுத்துவதால் ஒரு மாதத்திலிருந்து 45 நாட்களுக்குள் இறைச்சிக்குரிய வகையில் வளர்ச்சியடைகிறது.அதற்கு மேல் கோழிகளை வைத்திருக்காமல் இறைச்சி ஆக்கிவிடுகிறார்கள்.

கொழுப்புகளை உருவாக்கும் கோழி
ரசாயனங்கள் மற்றும் ஊசிகள் மூலம் பிராய்லர் கோழியின் வளர்ச்சி அடைவதால் கோழியின் சதைகளில் கெட்ட கொழுப்புகள் அதிக அளவில் சேர்கிறது. நாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது இதிலிருக்கும் கெட்ட கொழுப்பு சத்துகள் நம் உடலில் அதிக அளவில் சேர்கின்றன. நாளடைவில் இவை நம் உடல் உறுப்பு களைப் பதம் பார்க்கின்றன.

பிராய்லர் கோழி விரும்பி சாப்பிடும் 100 நபர்களில் 60 பேருக்கு கொழுப்பு அதிகமாக இருப்பது பரிசோதனை யில் தெரிய வந்துள்ளது. இந்த கெட்ட கொழுப்புகள் இரத்த நாளத்தில் நுழைந்து கொழுப்பை தேக்கி வைக்கி றது.

இவை அடைப்பை உருவாக்கும் போது இரத்த அழுத்தம், இரத்தத்தில் மிகுதியான கெட்ட கொழுப்பு சேர்கிறது. அதிகம் ப்ராய்லர் கோழியைச் சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் வீக்கம், குடல் புற்றுநோய் வரையான ஆபத் தைச் சமயங்களில் ஏற்படுத்தி விடுகிறது என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.


fry crispy chicken

விரைவில் பூப்படையும் பெண்குழந்தைகள்
சிக்கன் மொறு மொறுவென்று சுவைக்கூட்டி தயாரிக்கப்படும் மிருதுவான சிக்கனின் ருசியில் மயங்கி கிடக்கி றார்கள் பெண் குழந்தைகள். கோழியின் வளர்ச்சிக்காக போடும் ஹார்மோன் ஊசிகள் கோழியைச் சாப்பி டும் பெண் குழந்தைகளின் உடலிலும் ஹார்மோன் மாற்றங்களை உண்டாக்குகிறது. இது இயல்பாகவே பெண் குழந்தைகளின் எடையை அதிகரிக்கிறது.

இந்த அதீத உடல்பருமனால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் விரைவிலேயே பூப்படையும் நிலையை அடை கிறார்கள். அதாவது 8 வயது நிரம்பாத பெண்குழந்தைகளும் குழந்தை பருவத்திலேயே பூப்படைகிறார்கள்.
அதன் பிறகு மாதவிடாயிலும் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க கோழி இறைச் சியே காரணம் இல்லை என்றாலும் அதுவும் ஒரு முக்கிய காரணமே என்று சொல்லலாம்.

என்ன செய்யலாம்?
பிராய்லர் கோழியை இயன்றவரைத் தவிர்த்திடுங்கள். நாட்டுக்கோழி உடலுக்கு எவ்வித தீங்கையும் உண் டாக்காது. குழந்தைகளுக்கு கோழி இறைச்சியை முற்றிலும் தவிர்த்தால் நல்லது அல்லது அளவை குறைத்து மாதம் ஒருமுறை மட்டுமே அதிலும் வீட்டில் சமைத்து கொடுங்கள்.

மொறு மொறு க்ரிஸ்பியான கோழி ரெஸிபிகளுக்கு விடை கொடுத்து மணம் மாறாமல் இருக்கும் நாட்டுக் கோழியில் விதவிதமாய் சமைத்துகொடுங்கள். நீங்கள் அசைவ பிரியராக கோழி இறைச்சியின் மீது கவனம் செலுத்துபவராக இருந்தாலும் பிராய்லர் கோழியின் மீதான மோகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். இல்லை யென்றால் ஆரோக்கியத்தை இயல்பாகவே இழந்துவிடுவீர்கள் என்பதில் மாற்றமில்லை.

கண்ணால் பார்ப்பது பொய் என்று சொல்வது போல கண்ணைக் கவரும் செயற்கையான சுவையூட்டிகளுடன் மணம் மயக்கும் ருசி கூட்டும் பிராய்லர் கோழிக்கு விடைகொடுங்கள்.அதற்கு மாறாக கடல் உணவுகளைக் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்துங்கள். மீன், நண்டு, இறால் போன்றவை உடலுக்கு எவ்வித கெடுதலையும் செய்யாது.

விதவிதமாய் வித்தியாசமாய் ஆரோக்கியமற்றதை விரும்பாமல் அதைக் குழந்தைகளுக்கும் பழகாமல் நல் லதை நாவிற்கு பிடித்தமாதிரி சமைத்துப் பழகுங்கள். அதற்குதான் உண்ண கடல் உணவுகளும், நாட்டுக் கோழியும் பழகுங்கள்.


Top Post Ad

Below Post Ad