Type Here to Get Search Results !

நீதிபதிக்கு மனநலம் பாதிப்பு.. முஷரப் வழக்கில்அதிரடி!


தேச துரோக வழக்கில் முன்னாள் அதிபர் முஷரபிற்கு மரண தண்டனை விதித்த நீதிபதி மனநலம் சரியில்லாதவர் என பாகிஸ்தான் அரசு விமர்சித்துள்ளது.



ராணுவத்தின் மூலம் ஆட்சியை பிடித்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரபிற்கு எதிரான வழக்கு அந்நாட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்தது.முஷரப் தூக்கில் ஏற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த பெஷாவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வக்கார் அகமது ஷா, தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் முஷரப் இறந்து விட்டால், அவரது சடலத்தை சாலையில் இழுத்து வந்து 3 நாள்கள் தூக்கில் தொங்கவிட வேண்டும் என உத்தரவிட்டார்.

தீர்ப்பு வெளியானவுடன் அது குறித்து தமது சட்டக்குழுவினருடன் பிரதமர் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார்.

அதை அடுத்து, இறந்த பின்னரும் தூக்கிலேற்ற தீர்ப்பளித்துள்ள நீதிபதி மனநிலை சரியில்லாதவர் என்றும், அவரை மாற்ற வேண்டும் எனவும் நீதித்துறை கவுன்சிலுக்கு பாகிஸ்தான் அரசு பரிந்துரைத்துள்ளது


Top Post Ad

Below Post Ad