உப்பிலியபுரம் அருகே மதுபோதையால், உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் பணியை பாதியில் நிறுத்திய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டப்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்ட்புமனுக்கள் பெறும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, உதவி வேளாண் அலுவலரான முருகன் நியமிக்கப்பட்டிருந்தார்.மனுத்தாக்கலின் 6ம் நாளான நேற்று காலை வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டிருந்த முருகன், மாலை 3 மணிக்கு மேல் மனுக்களை பெறாமல் வெளியில் சென்றுவிட்டார். இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்கள் அலுவலர் இல்லாததால் மனு செய்ய முடியாமல் தவித்தனர்.பின்னர் அவர்கள் முருகனை தேடிய போது, மது போதையில் தூங்கியது தெரிய வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் சிவராசுக்கு புகார் அனுப்பினர். இது கூறித்து கலெக்டர் நடத்திய விசாரணையில் புகார் உண்மை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தேர்தல் பணியின் போது விதிமுறைகளை கடைபிடிக்காமல் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக, அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில், உதவி தேர்தல் நடத்தும் முருகனை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிவராசு அதிரடியாக உத்தரவிட்டார்.