Source: Maalaimalar
கண்களின் விழித்திரையில் ஒளி அடுக்குகள் பாதிக்கப்பட்டு பாதி அளவில் கண் பார்வை இழப்புகள் ஏற்படுகின்றன. இது சர்வதேச அளவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கானவர்களை பாதிக்கிறது.
இதை சரி செய்யும் ஆய்வில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் செயற்கை விழித்திரையை உருவாக்கி அதன் மூலம் இழந்த கண் பார்வையை பெற முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
செயற்கை விழித்திரையில் உள்ள மிக சிறிய மின் கடத்திகள் ஏற்கனவே இருக்கும் விழித்திரையில் இருக்கும் செல்களில் செயல்பாட்டை உருவாக்கி கண் பார்வை ஏற்பட செய்கிறது. இந்த தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.