Type Here to Get Search Results !

சூரிய கிரகணத்தின் போது என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது??








இன்று (டிசம்பர் 26-ஆம் தேதி) சூரிய கிரகணம் நிகழ்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும் போது அதன் நிழலால் சூரியனின் ஒரு பகுதி மறைக்கப்படும். இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இதுவே சூரியனை நிலவு முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம்.             சூரியனின் மையப்பகுதியை மட்டும் நிலவு மறைத்து விளிம்பில் வளையம் போல் ஒளி தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் ஆகும். இது ஒரு அபூர்வ நிகழ்வாகும். இந்த வளைய சூரிய கிரகணம் இன்று (26-ஆம் தேதி) நிகழ்கிறது.    இன்று ( 26-ஆம் தேதி) காலை 8 மணி முதல் 11.16 மணி வரை இதை பார்க்கலாம். 


தமிழகத்தில் கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இந்த சூரிய கிரகணம் முழுமையாக தெரியும்.    


சராசரியாக ஒரு நாளைக்கு ஐந்து முறை நில அதிர்வுகள் உருவாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் சூரிய கிரகணத்தின்போது, நிலநடுக்கம் வரும், சுனாமி வரும் என்று சில ஜோதிடர்கள் சொல்வதை நம்ப வேண்டாம். அதில் எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லை. மேலும் கிரகணத்தின்போது, சாப்பிடக் கூடாது என்று கூறுவதிலும் அர்த்தம் இல்லை என்று அவர்கள் கூறினர்.   


சூரிய கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது :  

 சூரியக் கிரணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. 


  கிரகணத்தின் போது பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.   


எந்தவொரு புனிதமான செயல்களைச் செய்யக் கூடாது. 


கிரகணத்தின் போது குடிநீரைப் பயன்படுத்தக் கூடாது.   


நேரடியாகச் சூரிய கிரகணத்தைப் பார்வையிடக் கூடாது. 


சமையல் செய்யக் கூடாது. 


நகம் கிள்ளக் கூடாது. 


எந்த வேலையும் செய்யக்கூடாது. 


  சூரிய கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும் :


   சூரியக் கண்ணாடி கொண்டு சூரியக் கிரகத்தைக் காணலாம்.  


 சூரியக் கிரணத்தில் சாப்பிடலாம். சாப்பிடக் மூடாது என்பதும் கிரகணத்தின் போது உணவுக் கெட்டுப் போகும் என்பதும் கட்டுக்கதையாக கூறப்படுகிறது.


Top Post Ad

Below Post Ad