Type Here to Get Search Results !

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்


ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.





ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அன்னிய முதலீட்டை அனுமதித்ததில் முறைகேடு என்பது சிபிஐ குற்றச்சாட்டு. இதனடிப்படையில் ஆகஸ்ட் 21-ந் தேதி ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.


இவ்வழக்கில் கடந்த அக்டோபர் 22-ல் சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது. அதற்கு முன்னதாக டெல்லி திகார் சிறையிலேயே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிதம்பரம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் ப. சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தன. இதனையடுத்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் மேல்முறையீடு செய்தார்.

இம்மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் ஆர். பானுமதி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச். ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டனர்.


Top Post Ad

Below Post Ad