நாளுக்கு நாள் புதுப்புது நோய்கள் மனிதனை தாக்கியவாறு உள்ளன. நோய்களை குணமாக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ புதுப்புது மாத்திரைகளும் மருத்துவ சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆய்வு தகவலின் படி நம் நாட்டில் அதிக அளவில் ஆன்டிபயாடிக்ட் மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளன. பெரும்பாலும் நாம் சிறிய உடல்நலக்குறைவு அல்லது மருத்துவரிகளிடம் போக இயலாத சூழலில் அருகிலிருக்கும் மருந்து கடைக்கு சென்று உபாதைகளை சொல்லி மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம்.
அதிகபட்சம் அப்போது நாம் MRP விலையையும், காலாவதி தேதியையும் மட்டுமே பார்ப்போம். பெரும்பாலானோர் இதை கூட பார்க்காமலே தான் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவர். நாம் எந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டாலும் அவற்றின் தன்மை அறிந்தே பயன்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு விடும்.
கடைகளில் விற்கப்படும் சில குறிப்பிட்ட வகை மாத்திரை அட்டைகளில் சிவப்பு நிற கோடு காணப்படும். இதற்கு என அர்த்தம் என்றால், இந்த மாத்திரையை மருத்துவர்களின் அறிவுரை இல்லாமல் சாப்பிட கூடாது என்பது பொருளாகும்.
மருத்துவரிடம் செல்லாமல் கடைகளில் நாமே சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுவது தவறு. அதிலும் சிவப்பு கோடு கொடுக்கபட்டிருக்கும் மாத்திரைகளை மருந்து சீட்டு இல்லாமல் வாங்கி போட்டுக்கொள்வது, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். மேலும் சிவப்பு கோடிட்ட மருந்துகளை உரிய மருந்து சீட்டை காட்டினால் மட்டுமே விற்க வேண்டும் என மருந்தகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
எனவே இனியும் அலட்சியம் காட்டாதீர்.. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள்...