Type Here to Get Search Results !

நான் விக்ரம் லேண்டரை கண்டுபிடிச்சிட்டேன்’!.. உலகை திரும்பி பார்க்க வைச்ச சென்னை இன்ஜினீயர்..!


சந்திராயன் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை மதுரையை சேர்ந்த இன்ஜினீயர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.




நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை இஸ்ரோ அனுப்பியது. கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி நிலவில் தரையிறங்க சுமார் 2 கிலோமீட்டர் இருந்த நிலையில் விக்ரம் லேண்டரின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை அடுத்து விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்காவின் நாசாவும் உதவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி விக்ரம் லேண்டரை தரையிறக்க திட்டமிருந்த இடத்தின் புகைப்படத்தை நாசா வெளியிட்டது. இதனை அடுத்து பல ஆய்வாளர்கள் அந்த புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை தேடியுள்ளனர். அதில் மதுரையை சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் என்ற இன்ஜினீயர் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து, அதனை நாசாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் நாசா சோதனை செய்துள்ளது. அப்போது அவர் கூறிய இடத்தில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் சண்முக சுப்பிரமணியன் கூறிய இடத்தை 'S' என குறித்து நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதற்காக தங்களது பாராட்டுக்களை மின்னஞ்சல் வழியாக அவருக்கு தெரிவித்துள்ளது. இவர் சென்னை தரமணியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.



Top Post Ad

Below Post Ad