Type Here to Get Search Results !

மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உ.பி அரசு அதிரடி உத்தரவு..!

நமாமி கங்கா திட்ட கூட்டத்திற்காக பிரதமர் மோடி உத்திரபிரதேசம் சென்றிருந்த போது படி ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார். தற்போது அந்த படியை இடித்து சீரமைக்க உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் கான்பூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. கூட்டம் முடிந்து கங்கை நதியில் படகுப் பயணம் செய்து திரும்பிய பின்னர் படி ஏறும்போது சீரற்ற படியால் கால் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து உதவி செய்தனர். இதில் அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் அந்தப் படிகட்டுகளை இடித்துவிட்டுக் சீரமைக்க உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அம்மண்டல கமிஷ்னர் பாப்டே கூறுகையில் ' பிரதமர் தடுக்கி விழுந்த படி மட்டும் மற்ற படிகட்டுகளைக் காட்டிலும் வேறுபட்டு இருக்கும். உயரம் சற்று குறைவாக இருக்கும். இதற்கு முன்னர் வேறு சிலரும் அதே படியில் தடுமாறி விழுந்துள்ளனர். எனவே விரைந்து அந்த படியை மட்டும் இடித்து சரியான உயரத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது ' என்றார்.


Top Post Ad

Below Post Ad