Type Here to Get Search Results !

55 லட்சம் பேரை ரசிகர்களாக கொண்ட பூனை



 வாஷிங்டன், அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த மைக் பிரிடாஸ்கி என்பவர் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்தார். ‘லில் பாப்’ என்ற பெயரிடப்பட்ட இந்த பூனை மற்ற பூனைகளை போல் இல்லாமல் வித்தியாசமான தோற்றத்தை கொண்டிருந்ததால் இணையத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. இந்த பூனை வளர்ச்சிக்குறைவு நோய் (குள்ளத்தன்மை) உள்பட பல உடல்நல பிரச்சினைகளோடு பிறந்திருந்தது. இதனால் இந்த பூனைக்கு ஒவ்வொரு பாதத்திலும் ஒரு விரல் கூடுதலாக இருந்தது. அதோடு சரியான வளர்ச்சியுறாத தாடையாலும் பற்கள் இல்லாததாலும் நாக்கு எப்போதும் வெளியே நீட்டி கொண்டு இருக்கும். இத்தகைய தனித்தன்மையான தோற்றத்தால் ‘லில் பாப்’ இணையத்தில் பிரபலமடைந்தது. ‘லில் பாப்’ பூனையை பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் 55 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர். இதன் நட்சத்திர பிரபலத்தை கொண்டு, மைக் பிரிடாஸ்கி அமெரிக்க விலங்கு வதை தடுப்பு நிறுவனம் மூலம் ஊனமுற்ற பிற பூனைகளுக்கு உதவுவது உள்பட தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டி வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் ‘லில் பாப்’ பூனை நேற்று முன்தினம் செத்தது. மைக் பிரிடாஸ்கி இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இது அந்த பூனையின் ரகிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Top Post Ad

Below Post Ad