'அஞ்சல்துறை சேமிப்பு கணக்குகளில், இனி குறைந்த பட்சம், 500 ரூபாய் இருப்பு வைக்க வேண்டும்' என, உத்தரவிடப் பட்டுள்ளது. வங்கிகளில் சேமிப்பு கணக்கின் தன்மைக்கு ஏற்ப, 5,000 ஆயிரம் ரூபாய் வரை, குறைந்தபட்ச இருப்பு இருக்க வேண்டும். ஆனால், அஞ்சல் வங்கியில், சேமிப்பு கணக்கில், 50 ரூபாய் இருப்பு வைத்தால் போதும். நாடு முழுவதும், 1.75 லட்சம் அஞ்சலகங்களில், பல லட்சம் வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்கு துவக்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அஞ்சல் சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம், 500 ரூபாய் இருப்பு வைக்க வேண்டும் என, மத்திய அஞ்சல் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அஞ்சல்துறை அதிகாரிகள் கூறியதாவது: அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்குகளில், குறைந்தபட்சம், 500 ரூபாய் இருக்க வேண்டும்.