ராஜஸ்தானில் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவருக்கு 50 பைசா நிலுவை தொகையை கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். இவர் அந்த பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியுள்ளார். நீண்ட நாட்களாக கணக்கில் பண புழக்கம் ஏதும் செய்யாமல் இருந்த நிலையில் ஜிதேந்திர குமாருக்கு வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது.
அந்த அறிவிப்பில் ஜிதேந்திர குமார் வங்கி கணக்கில் 50 பைசா நிலுவை தொகை செலுத்த வேண்டியது இருப்பதாகவும், உடனடியாக அதை செலுத்தாத பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை கண்டு ஜிதேந்திரகுமார் மற்றும் அவர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜிதேந்திரகுமாரின் 50 பைசா நிலுவை தொகையை கட்ட சென்ற அவரது தந்தையிடம் வங்கி அதிகாரிகள் பணம் வாங்க மறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source: Webdunia