தமிழகத்தின், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வந்தவாசியில் 5 ரூபாய் நாணயத்துக்கு ஒரு புடவையும் மற்றும் 1 ரூபாய் நாணயத்துக்கு லுங்கியும் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்த கடையின் முன் மக்கள் கூட்டம் அதிகஅளவில் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி பஜார் சாலையில் இருக்கும் சர்கார் சில்க்ஸ் என்னும் துணிக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கடையின் 51ம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு 5 ரூபாய் நாணயத்திற்கு சேலையும், 1 ரூபாய் நாணயத்திற்கு லுங்கியும் வழங்கப்படும் என்று கடை உரிமையாளர் அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, இந்த அதிரடி அறிவிப்பின் காரணமாக கடை முன்பு பெருந்திரளான மக்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக பஜார் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.