மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் இவை அனைத்தும் ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படாது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) என்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேக்னடிக் ஸ்டிரிப் கொண்ட ஏடிஎம் அட்டைகளும், கிரெடிட் அட்டைகளும் வரும் 31ம் தேதியுடன் முடக்கப்படும் என்றும், ஜனவரி 1ம் தேதி முதல் அவை செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த வகையான கார்டுகளை வைத்திருப்போர் உடனடியாக தாங்கள் கணக்கு பராமரிக்கும் வங்கி கிளைக்கு சென்று இவிஎம் சிப் போன்ற அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட அட்டைகளை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவிஎம் சிப் மற்றும் பின் அடிப்படையிலான அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்ட அட்டைகளை பெற்றவர்கள் மாற்றத் தேவையில்லை . ஜனவரி 1ம் தேதிக்கு பிறகும் அவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.