Type Here to Get Search Results !

எட்டு வயது சிறுவனின் ஆண்டு வருமானம் ரூ. 184 கோடி ! நம்ப முடிகிறதா உங்களால்?

 



  அமெரிக்காவைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஒருவன் 2019-ஆம் ஆண்டில் மட்டும் தனது யூ ட்யூப் சேனல் மூலமாக ரூ. 184 கோடி சம்பாதித்துள்ளான்.அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த சிறுவன் ரியான் குவான். இவனது பெற்றோர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டில், ‘ரியான் டாய்ஸ் ரெவிவ்யூ’ என்ற பெயரில் அவனுக்காக ஒரு யூ ட்யூப் சேனலைத் துவங்கினார்கள். அதில் சிறுவன் ரியான் புதிதாக ரியான் காஜி என்னும் பெயருடன்  புதிய விளையாட்டு பொம்மைகளை அதன் அட்டைப்பெட்டியில் இருந்து எடுத்து, அதனோடு முதல் முறையாக விளையாடும் காட்சிகளை ஒளிபரப்பினர். இந்த காட்சிகள் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இதன் காரணமாக சேனலுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கையும் பெருகியது. அதில் பதிவிடப்படும் ஒரு சில விடியோக்கள் 100 கோடிக்கு மேல் பார்வையிடப்பட்டன.  அந்த தளத்தின் விடியோக்கள் இதுவரை 3500 கோடி முறை பார்வையிடப்பட்டுள்ளன.சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த நுகர்வோர் உரிமைகள் சங்கம் ஒன்று, அமெரிக்க வர்த்தக விவகாரங்களை கையாளும் நீதிமன்றத்தில் இந்த சேனல் மீது வழக்குத் தொடுத்தது. அதில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் விடியோக்களில் எத்தனை விடியோக்கள் குறிப்பிட்ட சில பொம்மைத் தயாரிப்பு நிறுவனங்களால் நிதியுதவி அளித்து, சமூக வலைத்தளங்களால் விளம்பரப்படுத்தப்படுகின்றன என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.இதில் எழுந்த சர்ச்சையின் காரணமாக அந்த சேனலின் பெயர் தற்போது ரியானின் உலகம்’ என்னும் பொருள்படும் ‘ரியான்ஸ் வோர்லட்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.      தனது சேனலில் ஒளிபரப்பாகும் விடியோக்களை பார்வையிடுபவர்கள் வாயிலாக கிடைக்கும் விளம்பர வருமானம் மூலமாக,  ரியான் 2019-ஆம் ஆண்டில் மட்டும் ரூ. 184 கோடி சம்பாதித்துள்ளான். இதன்மூலம் இந்த ஆண்டில் உலகிலேயே அதிக வருமானம் பெரும் யூ ட்யூப் நபராக அவன் உருவாகியுள்ளன.முன்னதாக 2018 ஆம் ஆண்டிலும் ரூ. 156 கோடி சம்பாதித்து அவன் முதலிடத்தில் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ரியானது சேனலுக்கு 2.29 கோடி சந்தாதாரராகள் உள்ளனர். அதில் பல்வேறு விதமான அறிவூட்டும் வகையிலான விடியோக்களும் வெளியிடபப்டுகின்றன.


Top Post Ad

Below Post Ad