Type Here to Get Search Results !

பாபர் மசூதி வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது!


அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.






அயோத்தியில்  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக வழக்கு





தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.





இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.



புதுடெல்லி:

உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படுகிற சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது? என்பதில் இன்னும் இறுதி முடிவு வரவில்லை.

  

இதுதொடர்பான வழக்கை விசாரித்து, இந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30-ம் தேதி அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் 14 பேர் மேல்முறையீடு செய்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாள் விசாரணை நடத்தி முடித்துள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த மாதம் 16-ம் தேதி முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது.


Top Post Ad

Below Post Ad