Type Here to Get Search Results !

ஆதார் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட செயலி



இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் முன்பைவிட பாதுகாப்பான எம் ஆதார் செயலியை வெளியிட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
எம் ஆதார் செயலியை ஆங்கிலம் மட்டுமின்றி - தமிழ், இந்தி, பெங்காலி, ஒடியா, உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடா, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி மற்றும் அசாமீஸ் என மொத்தம் 13 மொழிகளில் இயக்க முடியும்.
இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களில் வாடிக்கையாளர்கள் முந்தைய பதிப்பை உடனடியாக அழித்துவிட்டு, புதிய வெர்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூன்றாம் தரப்பு செயலிகள் எதுவும் இயங்காது.
ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது, கியூ.ஆர். கோடு உருவாக்குவது, முகவரியை மாற்றுவது, மின்னஞ்சல் முகவரியை உறுதிப்படுத்துவது போன்றவற்றை செயலி மூலம் இயக்கலாம்.
மேலும் பயோமெட்ரிக் அம்சத்தை லாக் அல்லது அன்லாக் செய்ய முடியும் என்று இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

Top Post Ad

Below Post Ad