சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நடைபெற்றது. சூரியனை கடக்கும்போது சிறிய அளவிலான கரும்புள்ளி போல புதன் கிரகம் காட்சி அளித்தது. ஒரு நூற்றாண்டுக்கு சில முறை மட்டுமே இந்த அரிய நிகழ்வு நடைபெறும். இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும். புதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சி அளித்தது.இந்தியாவில் கடந்த 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வை இன்று காணலாம். அடுத்த நிகழ்வு வரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் மீண்டும் நிகழும் என்றும் வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.