கிரெடிட் கார்டுகளை ஊழல்வாதிகளிடம் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. எனினும், சமயங்களில் ஹேக்கர்கள் மற்றும் ஸ்கேமர்களிடம் இருந்து கார்டு விவரங்களை பாதுகாக்க பலரும் தவறிவிடுகின்றனர்.
ஸ்கேமர்களுக்கு கார்டு விவரங்கள் மிகவும் அவசியம் என்பதால், அதனை சேகரிக்க அவர்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றலாம். இவற்றில் சில முறைகள் இயல்பான ஒன்றாகவும், மற்றொன்று தொழில்நுட்பம் சார்ந்து இருக்கலாம்.
ஃபிஷிங் பயன்படுத்தலாம்:
இது சற்றே பழைய முறை தான் என்றாலும், இது செயல்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. முதலில் அவர்கள் போன் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு உங்களின் கிரெடிட் கார்டு விவரங்களை கேட்பர். இவ்வாறு கேட்கும் போது அவர்கள் தான் கிரெடிட் கார்டை வழங்கியவர் என்றும் கூறுவர். இவ்வாறு வரும் அழைப்புகளை மிக எளிமையாக கண்டறிந்து விட முடியும் என்ற போதும், சிலரை கண்டறிவது அத்தனை சுலபம் கிடையாது.
டேட்டாபேஸ் லீக்:
கிரெடிட் கார்டு விவரங்களை சேகரிப்பதற்கென ஆன்லைன் டேட்டா லீக்களும் நடைபெறுகின்றன. முன்னணி நிறுவனங்களின் டேட்டாபேஸ் மூலம் வாடிக்கையாளர்களின் கட்டண விவரங்களை சேகரிக்கப்படுகின்றன. இதுதவிர ஏற்கனவே திருடப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்களை அதிகளவில் வாங்கி அவற்றை பயன்படுத்தலாம். இவ்வாறு வாங்கப்படும் விவரங்களில் உங்களது கார்டு விவரங்களும் இருக்கலாம்.
கீலாகர்கள்:
கம்ப்யூட்டரில் கீலாகர் அல்லது மால்வேர் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் கிரெடிட் கார்டு கொண்டு ஷாப்பிங் செய்தால், கிரெடிட் கார்டு விவரங்கள் திருடுபோக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. கீலாகர்களை தவிர்த்து உங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.
என்.எஃப்.சி. ஸ்கிம்மிங்:
கிரெடிட் கார்டுகளில் பில்ட்-இன் என்.எஃப்.சி. ஸ்கேனிங் இருக்கின்றன. கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது ஸ்கேமர்கள் அருகில் இருக்கும் சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளும். ஸ்கிம்மர் அருகில் ஒருவர் செல்லும் போது பண பரிமாற்றத்தை செய்தால், அவரது அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை அவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது
ஸ்கேமர் ஒருவரிடம் கிரெடிட் கார்டு இருந்தால், அதனை அவர் மட்டும் பயன்படுத்தலாம் அல்லது அதனை மற்றொருவருக்கு விற்பனை செய்யலாம். காண்டாக்ட்லெஸ் பேமண்ட்ஸ்: காண்டாக்ட்லெஸ் பேமண்ட் செய்ய பின் மற்றும் கையெழுத்துக்கள் தேவையில்லை. எனினும், இவ்வாறான பண பரிமாற்றங்களுக்கான அளவு குறைவு தான். ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் பேமண்ட் செய்யும் போது பின் தேவையில்லைய இது பொதுவான ஒன்று தான்.
இதுபோன்ற சமயங்களில் கிரெடிட் கார்டு லிமிட் மட்டுமே வாடிக்கையாளர்களை காப்பாற்றும். ஒருவேளை உங்களது கார்டு ஹேக் செய்யப்பட்டாலும், அதில் உள்ள தொகை மட்டுமே உங்களை காப்பாற்றும். கார்டு லாக் செய்யப்படும் முன் அதனை எடுத்தவர் அதை கொண்டு சிறிதளவேனும் செலவு செய்திட முடியும்.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
மேலே கொடுக்கப்பட்ட ஆபத்துக்களில் சிக்காமல் இருக்க கிரெடிட் கார்டு விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது. யாரேனும் கிரெடிட் கார்டு விவரங்களை கேட்டால், அதிக கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை தொலைபேசியில் விவரங்களை பகிரும் பட்சத்தில் அதனை வேறு யாரும் கேட்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஏ.டி.எம்., உணவகம் போன்ற இடங்களுக்கு செல்லும் போது கூடுதல் கவனமாக செயல்பட வேண்டும். உங்களிடம் RFID பிளாக்கிங் வாலெட் இருக்க வேண்டும். அடிக்கடி உங்களின் பரிமாற்றங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.