இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (எல்பிஜி) பரவலாக பயன்பாட்டுக்கு வருவதற்கு முன், வீடுகளில் உணவு சமைக்க விறகு அடுப்பு உபயோகத்தில் இருந்து வந்தது.
அந்த காலக்கட்டத்தில் விறகுகளுடன் மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்பட்ட வரட்டியும் முக்கிய எரிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது விறகு அடுப்புகளின் பயன்பாடு நகர்ப்புறங்களில் வெகுவாக குறைந்துள்ள போதிலும், கிராமப்புறங்களில் மக்கள், வரட்டியை தங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொண்டுதான் உள்ளனர்.
அத்துடன், ஹிந்துக்களின் இறுதிச் சடங்குகளில் பிரேதத்தை எரியூட்ட முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், வளர்ந்த வல்லரசு நாடான அமெரிக்காவின் நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வரட்டி விற்பனைக்கு வந்துள்ளது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
“மத சடங்குகளுக்கு மட்டும் ; உண்பதற்கு அல்ல” ( -Dung Cakes -For religious purpose -not eatable) என்ற எச்சரிக்கை வாசகத்துடன், 10 துண்டுகள் கொண்ட ஒரு வரட்டி பாக்கெட், 2.99 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் 215 ரூபாய்க்கு) விற்கப்படுகிறது.