Type Here to Get Search Results !

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் வரும் 25ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து வெப்ப சலனம் நீடித்து வருவதை அடுத்து பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் தமிழக கடலோரத்தில் மையம் கொண்டு இருந்த காற்றழுத்தம் காரணமாக வட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று திருச்செந்தூரில் 70மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழி 60 மிமீ, நிலக்கோட்டை 50 மிமீ, சென்னை விமான நிலையம், ெசம்பரம்பாக்கம், கொளப்பாக்கம், தரமணி 40மிமீ மழை பெய்துள்ளது.

இதுதவிர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று 10 முதல் 30 மிமீ வரை மழை பெய்துள்ளது.இந்நிலையில், வெப்ப சலனம் மேலும் நீடிப்பதால் கோவை, சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் காற்றழுத்தம் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மழையானது வரும் 25ம் தேதி வரை நீடிக்கும். இன்றும் 25ம் தேதியும் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்யும். அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெயில் 25-32 டிகரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும். இதேநிலையே அடுத்த 48 மணிநேரத்திற்கு தொடரும் எனக்கூறப்பட்டுள்ளது.




தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரத்தில் 8 செ.மீட்டரும், கேளம்பாக்கத்தில் 7 செ.மீட்டரும், சோழிங்கநல்லூர், காயல்பட்டினம், கடலூரில் 6 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
வருகிற 26-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Top Post Ad

Below Post Ad