இணையம் இல்லாத போது பிக்பாக்கெட், வீடு புகுந்து திருடுவது என்றிருந்த குற்ற நடவடிக்கைகள், தொழிநுட்பம் வளர்ந்த பிறகு, அந்த தொழிநுட்பங்களை பயன்படுத்தியே புது புது வழிகளில் நமது வங்கி கணக்கில் இருந்து நேரடியாக திருட வழிவகை செய்துள்ளது.
அப்படி வெறும் ஈ-மெயில் ஒன்றை அனுப்பி அதன் வழியாக உங்கள் தகவல்களை திருடும் கும்பல் குறித்து எச்சரித்துள்ளது கூகிள் நிறுவனம். இது குறித்து கூகுளின் TAG குழுவின் ஷேன் ஹண்ட்லி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,
இந்தியாவை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரின் ஈ-மெயில் கணக்குகள், ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இப்படி ஹேக் செய்ய கூகுள் நிறுவனம் அனுப்புவதை போன்றே ஈ-மெயில் ஒன்றை அனுப்புவார்கள்.
அதில் உங்கள் ஈ-மெயில் கணக்குக்கு ஆபத்து, கடவுச்சொல்லை மாற்றுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். இதனை உண்மையென நம்பி அவர்கள் கொடுத்திருக்கும் லிங்கில் சென்று, நம் கடவுச்சொல்லை பதிவிட்டு விட்டால் உடனடியாக கணக்கு ஹேக் செய்யப்படும்.
ஆகையால், கூகிள் நிறுவன பெயரிலேயே ஈ-மெயில் வந்தாலும் கொஞ்சம் கவனமாக, பெயர் முகவரியை சரிபார்த்த பின் எதையும் செய்யுங்கள்’ என எச்சரித்திருந்தார்.
இப்படி கூகிள் ஈ-மெயில் ஹேக் செய்யப்பட்ட கணக்குகளுடன், இணைக்கப்பட்டுள்ள வங்கி, மற்றும் இதர சேவைகளை ஹேக்கர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் காரணமாக உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணமும் பறிபோக வாய்ப்பிருக்கிறது. ஆகையால் இப்படிப்பட்ட மின்னஞ்சல் களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது நம் பொறுப்பு.