Type Here to Get Search Results !

தீராத மனஅழுத்ததில் தவிக்கிறீர்களா..? எளிதாக விடுபடலாம் வாங்க


இன்றைய காலகட்டத்தில் stress என்ற வார்த்தையை உபயோகிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள்.



 தினம் தினம் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகமானால் மன நோயை தூண்டி மன உளைச்சலை உண்டாக்கும்.
இவையெல்லாம் இப்பொழுது சர்வசாதாரணமாக அனைத்து வயதினருக்கும் ஏற்புடையதாகிவிட்டது. பள்ளியில் படிக்கும் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்வார்கள் stress என்பதற்கான அர்த்தத்தை... மன அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் என்ன? அதனை தடுப்பதற்கு என்ன வழிமுறைகளை கையாளலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்...
மன நோய் என்றால் என்ன ?
ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகளில் இருந்தே தொடங்குகிறது மன அழுத்தம். சிறு வயதில் நமக்கு பிடித்த ஒரு பொருளை அப்பா வாங்கிதராமல் இருப்பின் எழும் பிடிவாத தன்மையும் எதிர்பார்த்த ஒரு விஷயம் நடக்காத பொழுது அதை தாங்கிக்கொள்ளும் மன பான்மை இல்லாமல் சோகத்தில் மனம் மூழ்கிவிடுகிறது.
இந்த தேக்க நிலை, அதாவது யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கும் பொழுது ஒருவகையான போராட்டம் எழும். அதன் பெயர்தான் மன அழுத்தம்... மற்றொரு வகை மன அழுத்தமும் உண்டு. மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைப்பாட்டால் ஏற்படும்.
மன அழுத்தம் உடையவர்கள் குறுகிய மனப்பான்மையோடு தனிமையை விரும்புவார்கள், வாழ்க்கையில் ஏதும் கிடைக்காதது போன்று நினைத்து கொண்டு சுற்றத்தை விட்டு விலகுவார்கள். இவையெல்லாம் அவர்களுடைய புரிதலுக்கு எட்டாத பொழுது நடக்கின்ற நிகழ்வு .
stress-லிருந்து விடுபட நாம் செய்யும் மிக பெரிய தவறு செல்போனை தேடி போவது...
உலகம் நம் உள்ளங்கையில் இருக்கின்றது என்று செல்போனை அதிகமாக செயல்படுத்துவதனால் உளவியல் ரீதியாக பாதிப்படைய கூடும் என மன நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
செல்போனில் அறிவை வளர்த்து கொள்வதற்கும் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் நிறைய உண்டு என்பதற்கான மாற்று கருத்தே இல்லை. ஆனால் அதே நேரம் கால வரைமுறையின்றி எந்நேரமும் செல்போனை பார்த்துக்கொண்டிருப்பதும் ஒரு விதமான மன நோய் ஆகும்.
கருத்துக்களை பகிர்வதில் தொடங்கி like-காக டிக் டாக் ல் காத்திருப்பது வரை மொபைலில் மூழ்கி கிடப்பது என்பது அதுவும் ஒரு போதைக்கு அடிமையாகி கிடப்பது போன்றுதான்.


செல்போன் வந்ததிலிருந்து நம் மூளைக்கு வேலை கொடுப்பதும் குறைந்துவிட்டது. யோசிக்க நேரமே கொடுக்காமல் என்ன கேள்வி எழுந்தாலும் உடனே இணையதளத்தில் தேட ஆரம்பித்து விடுகிறோம்.
ஒரு சாதாரணமான கணக்கு போடுவதற்கு கூட calculator பயன்படுத்துகிறோம். மூளையை செயல் படுத்தாமல் இருந்தால் ஒரு கட்டத்தில் மூளை செலயலிழந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது .
அதீதமாக செல்போன் பயப்படுத்துவதினால் ஒருவிதமான மன நோய்க்கு தள்ளப்படுகிறோம் என்று சொன்னாலும் அது மிகையல்ல
மன அழுத்தத்திலுருந்து விடு படுவது எப்படி 
மன அழுத்தம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வெளிப்படும். சிலருக்கு மனம் படபடக்கும், ஒருசிலருக்கு சீரற்ற தன்மையில் சுவாசம் வெளிப்படும். ஒருசிலருக்கு தலைவலி, தோள்பட்டை வலி ஏற்படக்கூடும். அத்தகைய அறிகுறிகள் தென்படும்போதே மன அழுத்த பாதிப்புக்கு இடம்கொடுக்காமல் அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முதலில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்... எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்... குறுகிய வட்டத்திற்குள்ளிருந்து வெளி வரவேண்டும் . எந்த ஒரு பதற்றமான மனதையும் சாந்த படுத்தும் சக்தி இசைக்கு உள்ளது. மன அழுத்தம் ஏற்படும்பொழுது இசை கேட்பது நல்லது. மன அழுத்தத்திற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைபயணம் மேற்கொள்ளுங்கள்... நடை பயிற்சி மேற்கோள்ளும் போது கண்கள் கவனத்தை திசைதிருப்பும். பார்க்கும் விஷயங்களில் கவனத்தை பதிய செய்யும்போது மன பாரம் குறையும். நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள உதவும் சில பாசிட்டிவ் வாசகங்களை உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த சிறந்த மேற்கோள்களை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். அதை உங்களுக்குள்ளேயே அடிக்கடி சொல்லிப் பாருங்கள். உதாரணமாக, இதுவும் கடந்து போகும், நடப்பது எல்லாம் நன்மைக்கே என்பது போன்று வசனங்களை சொல்லும் போது உங்களின் மனநிலை ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் .


Top Post Ad

Below Post Ad