தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் விரைவில் தமிழ் மொழியில் அறிவிப்புகள் வெளியாகும் என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கவிஞர் சுரதாவின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அசோக் பில்லரில் உள்ள அவரது சிலைக்கு, தமிழக அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த பாண்டியராஜன், சமீபத்தில் பிரதமர் சென்னை வந்தபோது, தமிழகத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டினார். அதன்படி, அத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அமைச்சர் கூறினார்.