நியூசிலாந்து நாட்டில், பயணிகள் விமானம் ஒன்றின் அருகே மின்னல்கள் தாக்கிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. நியூசிலாந்து நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையமான கிறைஸ்ட்சர்ச்சி உள்ள ஒடுதளத்தில் நின்ற எமிரேட்ஸ் நிறுவன பயணிகள் விமானம், விமானங்கள் நிறுத்தப்படும் இடமான ஹேங்கர்ஸ் என்ற பகுதிக்குச் செல்ல தயாரானது. அப்போது, அந்த விமானத்தின் அருகே, மின்னல்கள் வந்து தாக்கியது. ஆனால் விமானத்துக்கு எந்த விபத்து, நேரவில்லை.அங்கிருந்த விமான நிலைய ஊழியர் தனது செல்போனில் இந்தக் காட்சியை எடுத்தார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.