Type Here to Get Search Results !

வேகமாக எடை குறைக்க உதவும் சுவையான சூப்!



வேகமான எடை இழப்பிற்கு எலுமிச்சை, கொத்தமல்லி, வெங்காயம் மற்றும் கருப்பு மிளகு. ஒரு சிட்டிகை சிவப்பு மிளகாய் தூள் பயன்படுத்தி செய்யப்படும் சூப்பை பருகுவதால் மிக வேகமாக உடல் எடை குறைவதுடன், உடலுக்கு தேவையான நீர் சத்தும் கிடைக்கிறது.

இந்த சசூப்பின் முக்கிய மூலப்பொருளாக இருக்கக்கூடிய எலுமிச்சை,  நமக்குத் தெரிந்த ஆரோக்கியமான சிட்ரஸ் பழங்களில் ஒன்றாகும். வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமான எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும், எடை இழப்புக்கு உதவும். அனைத்து பிரபலமான டிடாக்ஸ் பானங்களிலும் எலுமிச்சை ஒரு முக்கிய மூலப்பொருளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாக கொத்தமல்லி, இது  மாங்கனீசு, இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. அதோடு கொத்தமல்லி இலைகளும் இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.  உடல் எடையை குறைக்க உதவுகிறது. கொத்தமல்லியில்  கலோரிகள்  மிகக் குறைவாக உள்ளது, எனவே எடை இழப்புக்கு உகந்த மூலப்பொருளாக கருதப்படுகிறது.


Top Post Ad

Below Post Ad