Type Here to Get Search Results !

திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்குத் தடை..! தேவஸ்தானம் எடுத்த அதிரடி..!

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீருக்கு பதிலாக, ஜல பிரசாதம் என்ற பெயரில் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்த தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்டரங்கில் இன்று திருப்பதி தேவஸ்தானத்தில் இருக்கும் பல்வேறு துறைகளின் தலைமை அதிகாரிகளுடன் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆலோசனை நடத்தினார்.





அக்கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, கடந்த மாதம் தேவஸ்தான அறங்காவலர் குழு எடுத்த முடிவின்படி இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பாட்டில் குடிநீர் பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளோம்.





அதன் அடிப்படையில் திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான அலுவலகங்கள் அனைத்திலும் இன்னும் 15 நாட்களுக்குள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.





பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் ஜல பிரசாதம்  அனைத்து காட்டேஜ்களிலும் கிடைக்க செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.





அதேபோல் திருமலையில் இருக்கும் ஹோட்டல்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றிலும் தேவஸ்தானம் விநியோகம் செய்யும் ஜலபிரசாதம் குடிநீர் பக்தர்களுக்கு கிடைக்க செய்ய தேவையான ஏற்பாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.





அதனை தொடர்ந்து இன்னும் 30 நாட்களுக்குள் மலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் பயன்பாடு முடிவுக்கு கொண்டு வரப்படும். மேலும் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு டோக்கன்களை இடைத்தரகர்கள் குறுக்குவழியில் பெற்று பலமடைந்து வருவதை தடுக்க டோக்கன் வினியோகத்தில் பார்கோடு முறை அமலுக்கு கொண்டு வரப்படும் என இவ்வாறு தெரிவித்தார்.




Top Post Ad

Below Post Ad