ஆதார் விதிகளில் தனிநபர் பிரத்யேக அடையாள ஆணையம் திருத்தம் செய்துள்ளது. இதனால், ஆதார் அட்டையில் இனி பெயரை 2 முறை, பாலினம் மற்றும் பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்ற இயலும். ஆதார் அட்டைக்கு பதிவு செய்து கொள்ளும்போது பிறந்த தேதிக்கு சான்றாக உரிய ஆவணம் இல்லாவிட்டால் தோராயமாக பிறந்த தேதி பதிவு செய்து கொள்ளப்படும்.
பின்னர் உரிய ஆவணங்களுடன் தனி நபர்கள் தங்களது பிறந்த தேதியை மாற்றிக் கொள்ளலாம். மேலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஆதார் அட்டையில் திருத்தங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் பிராந்திய ஆதார் அலுவலகத்தை அணுக வேண்டும்.