நாடு முழுவதும் 8 மணி நேரமாக இருக்கும் ஊழியர்களின் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் பட்சத்தில், ஒரு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச வருமானத்தில் 20% எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கும், 25% குழந்தைகளின் படிப்பு, மருத்துவ செலவுகளுக்கு இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.