Type Here to Get Search Results !

5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியீடு


தமிழகத்தில் 5புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.





தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக மேலும் 2 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் நெல்லை 2 மாவட்டமாக பிரிக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து மாவட்டங்களை தாலுக்கா வாரியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், 5புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் நெல்லை, தென்காசி என 2மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளன.

இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.




Top Post Ad

Below Post Ad