ஆபாசமான மற்றும் தவறான தகவல்கள் வெளியிட்ட 5.4 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கி உள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் வெளியிட்டுள்ள தகவலில், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற போலி கணக்குகளை கண்டறிந்து நீக்கி வருகிறோம் என தெரிவித்துள்ளது.
பாசமான மற்றும் தவறான தகவல்கள் பதிவிடப்படும் கணக்குகள், சமூக வலைதள பாதுகாப்பு அடிப்படையில் நீக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 5.4 பில்லியன் பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. ஆனால் நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே புதிய கணக்குகள் உருவாக்கப்படுகிறது எனவும் தெரிவித்தது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகைய போலி கணக்குகளை கண்டறியவும், நீக்கவும் பேஸ்புக் நிறுவனம் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது என கூறியுள்ளது. இத்தகைய போலி கணக்குகள் வைத்திருப்போர் குறித்த விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என அமெரிக்க அரசு கேட்கும் விபரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என தெரிவித்தது. பேஸ்புக் கணக்குகள் குறித்து அதிக விபரங்கள் கேட்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, ஐரோப்பா, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.